முகப்பு
வணிகம்

சேமித்து வைக்கும் வசதிகளில் மாற்றங்கள் செய்யும் கூகுள்

2 வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத மின்னஞ்சல், சேமிப்பகம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றின் உள்ளடக்கங்களை நீக்க உள்ளதாக இணையத் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
2 வருடத்திற்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாத உள்ளடக்கங்களை நீக்கும் கூகுள்
பகிர்:

2 வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத மின்னஞ்சல், சேமிப்பகம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றின் உள்ளடக்கங்களை நீக்க உள்ளதாக இணையத் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அறிவித்துள்ளது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப முன்னணி நிறுவனமாக கூகுள் உள்ளது. இது அவ்வப்போது தங்களது பயனர்களின் தேவைக்கேற்ப பல்வேறு வசதிகளை அறிவித்து வருகின்றது. 

இந்நிலையில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளை  நீக்குவதற்கான முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது. மின்னஞ்சல், சேமிப்பகம் மற்றும் புகைப்படங்கள் செயலற்ற நிலையில் இருந்தால் அவற்றின் உள்ளடக்கங்களை நீக்குவதற்கான அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது.

அதன்படி 2 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டு பயன்படுத்தப்படாத உள்ளடக்கங்கள் நீக்கப்படும். இந்த வசதி அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்படாத உள்ளடக்கங்களை நீக்குவதற்கு முன் அவற்றை நீக்குவதற்கான அறிவிப்பு பயனர்களுக்கு தெரிவிக்கப்படும் என கூகுள் குறிப்பிட்டுள்ளது.

மேலும் புகைப்படங்களைச் சேமிக்க கூகுள் சேமிப்பகத்தின் 15 ஜிபி அளவைக் காட்டிலும் கூடுதல் சேமிப்பிடம் தேவைப்பட்டால் அவற்றை குறிப்பிட்டக் கட்டணத்துடன் 100 ஜிபி அளவிலிருந்து மேம்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →