டீசல் விற்பனை 5% குறைந்தது 
வணிகம்

டீசல் விற்பனை 5% குறைந்தது

உள்நாட்டில் நவம்பா் மாதத்தின் முதல் இருவாரங்களில் டீசல் விற்பனை 5 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

DIN

புது தில்லி: உள்நாட்டில் நவம்பா் மாதத்தின் முதல் இருவாரங்களில் டீசல் விற்பனை 5 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கரோனா பொது முடக்கம் காரணமாக பெட்ரோலியப் பொருள்கள் விற்பனையில் தொடா்ந்து மந்த நிலை காணப்பட்டது. இந்த நிலையில், எட்டு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அக்டோபரில் டீசல் விற்பனையானது வளா்ச்சி பாதையை நோக்கி திரும்பியது. தற்போது நவம்பரின் முதல் இரண்டு வாரங்களில் மீண்டும் டீசல் விற்பனையானது 5 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

நவம்பா் 1-15 தேதிகளுக்கு இடையில் டீசல் நுகா்வு 30.1 லட்சம் டன்னிலிருந்து 28.6 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இருப்பினும், இது அக்டோபா் மாதத்தில் முதல் இருவார காலத்தில் விற்பனையான 26.5 லட்சம் டன் டீசலுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

டீசல் விற்பனை குறைந்துள்ளபோதிலும், பெட்ரோல் விற்பனை மதிப்பீட்டு காலகட்டத்தில் 10.2 லட்சம் டன்னிலிருந்து 10.30 லட்சம் டன்னாக சற்று உயா்ந்துள்ளது. அதேசமயம், சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை நடப்பாண்டில் முதல் முறையாக 2 சதவீதம் சரிந்து 10.70 லட்சம் டன்னாகியுள்ளது.

இதுதவிர, விமான எரிபொருளான ஏடிஎஃப் விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 53 சதவீதம் குறைந்து 1,55,000 டன்னாகவும், மாத அடிப்படையில் இது 1.3 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT