முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம்

கடந்த 2 நாள்களாக உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை வணிகம் இன்று காலை சரிவுடன் தொடங்கியது.

Updated On : 19 நவம்பர், 2020 at 10:34 AM
பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம் (கோப்புப்படம்)
பகிர்:

கடந்த 2 நாள்களாக உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை வணிகம் இன்று காலை சரிவுடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 277 புள்ளிகள் சரிந்து  44,024 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.46 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38 புள்ளிகள் சரிந்து 12,900 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.32 சதவிகிதம் சரிவாகும்.

Advertisement

பங்குச்சந்தையில் கடந்த இரண்டு நாள்களாக 50 சதவிகிதத்திற்கும் அதிகமான நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய வங்கிகளின் பங்குகள் சரிந்தன.

பங்குச்சந்தை வணிகத்தில் அதிகபட்சமாக பஜாஜ் ஃபின்சர்வீஸ் நிறுவனப் பங்கு 4.74 சதவிகிதம் உயர்ந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து டாடா ஸ்டீல் 2.90 சதவிகிதமும், பஜாஜ் ஃபைனான்ஸ் 2.30 சதவிகிதமும், எம் & எம் நிறுவனப் பங்கு 1.89 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.