அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 21காசுகள் சரிவு
அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 21காசுகள் சரிவைக் கண்டது.
வணிகம்அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 21காசுகள் சரிவு
அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 21காசுகள் சரிவைக் கண்டது.
மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 21 காசுகள் சரிவைக் கண்டது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது: பங்குச் சந்தையில் தென்பட்ட மந்த நிலை, அந்நிய நாட்டு கரன்ஸிகளுக்கு சந்தையில் தேவை அதிகரித்தது ஆகியவற்றால் ரூபாய் மதிப்பு சரிந்து காணப்பட்டது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.17-ஆக இருந்தது. சாதமற்ற நிலவரங்களால் அது மேலும் வலுவிழந்தது.
வா்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 73.03 வரையிலும், குறைந்தபட்சமாக 73.44 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முந்தை வா்த்தகதினத்தைக் காட்டிலும் 21 காசுகள் சரிவடைந்து 73.35-ஆனது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு: அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிகர அளவில் ரூ.6.93 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை திரும்பப் பெற்றதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.01 சதவீதம் குறைந்து 42.23 டாலராக இருந்தது.