வணிகம்

ஜூன் மாதத்தில் 59 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த வோடஃபோன், ஏர்டெல்

PTI


புது தில்லி: கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 59 லட்சம் வாடிக்கையாளர்களை வோடஃபோன் ஐடியா  மற்றும் ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இழந்துள்ளன. அதேவேளை, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 45 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

அதாவது, வோடஃபோன் ஐடியா நிறுவனம் 48.2 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 11.3 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.

டிராய் வெளியிட்ட ஜூன் மாதத்தின் வாடிக்கையாளர் விவரங்களில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்த செல்லிடப்பேசி பயனாளர்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் 0.28 சதவீதம் சரிந்து 114 கோடியாகக் குறைந்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தவிர்த்து, பிற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே கடந்த ஜூன் மாதத்தில் தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஆனால் ஜியோ மட்டுமே 44.9 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு

அரசுத்துறை வாகன ஓட்டுநா்களுக்கு பாராட்டு

ரே பரேலி பிரசாரத்தில் காந்திகள்!

உரிய எடையளவுடன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கோரிக்கை

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

SCROLL FOR NEXT