3 நொடிகளுக்கு ஒர் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் ஓப்போ நிறுவனம்
ஓப்போ நிறுவனம் தனது நொய்டா தொழிற்சாலையில், 3 நொடிகளுக்கு ஒரு செல்போன் என்ற விகிதத்தில் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளது.
ஓப்போ நிறுவனம் தனது நொய்டா தொழிற்சாலையில், 3 நொடிகளுக்கு ஒரு செல்போன் என்ற விகிதத்தில் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஓப்போ நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 110 ஏக்கரில் தொழிற்சாலையை நிறுவியுள்ளது.
இந்த தொழிற்சாலையில், 12 லட்சம் ஸ்மாட்போன்களைத் தயாரிப்பதற்காக உதிரி பாகங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
நொய்டா தொழிற்சாலையில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் மூலம் மாதத்திற்கு 60 லட்சம் ஸ்மார்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. உதிரி பாகங்களை ஒருங்கிணைப்பது, வெளிப்புறத்தை இணைப்பது, போன்று 4 பிரிவுகளில் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றுகின்றனர்.
மேற்புற இணைப்பு தொழில்நுட்பத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரம், ஒரு மணி நேரத்தில் 37 ஆயிரம் நுண்ணிய பாகங்களை இணைக்கிறது.
மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டை 6.25 நொடிகளில் தயாரிப்பதாகவும் ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழிற்சாலையின் உற்பத்தி பகுதியில் 52 தயாரிப்பு மையங்களும், 37 உதிரி பாக இணைப்பு மையங்களும், 20 பரிசோதனை மையங்களும் உள்ளன. இதன் மூலம் 200 ஸ்மார் போன்களுக்கான நுண்ணிய பாகங்கள் வெறும் 10 நிமிடங்களில் தயாரிக்கப்படுகின்றன.
மின்னணு சந்தையில் ஓப்போ ஸ்மார்ட் போன்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தயாரிப்பை துரிதப்படுத்தியுள்ளதாக ஓப்போ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் எல்விஸ் ஸோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், சுறுசுறுப்புடன், புதுமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவை ஓப்போ நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் எனவும் கூறினார்.