முகப்பு
இந்தியா

வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!

வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியது குறித்து...

Updated On : 19 மார்ச், 2026 at 12:30 PM
அஸீம் மகாஜன்
பகிர்:

வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் வந்துள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28 முதல் நடைபெற்று வரும் நிலையில், போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளின் வான்வழிப் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பல முக்கிய தலைவர்கள் உள்பட லட்சக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத சூழல் உருவானது. இதனையடுத்து, அண்மைக் காலமாக குறைந்த அளவில் இயக்கப்படும் விமானங்கள் மூலம் இந்தியர்கள் தாயகம் வந்தடைந்து கொண்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் வளைகுடாப் பிரிவு இணைச் செயலாளர் அஸீம் மகாஜன் வியாழக்கிழமை (மார்ச் 19) கூறுகையில்,

“பிப்ரவரி 28 முதல் 2.8 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இன்று ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், எம்டி சேஃப்சீ விஷ்ணு கப்பலில் உள்ள 15 இந்தியப் பணியாளர்கள் விரைவில் இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அவர்களின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

More than 2.8 lakh people from Gulf countries have arrived in India, said Aseem Mahajan, Joint Secretary, Gulf Division, Indian Ministry of External Affairs, on Thursday (March 19).

முழு கட்டுரையைப் படிக்க →