வணிகம்

எச்சரிக்கை!: இலவச நெட்பிளிக்ஸ் செயலியில் தரவுகள் திருடப்படலாம்

DIN

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் இலவச நெட்பிளிக்ஸ் செயலி மூலம் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலவச நெட்பிளிக்ஸ் செயலி பதிவிறக்கம் செய்துள்ள ஸ்மார்ட் போன்களின் வாட்ஸ் ஆப்-பை கண்காணித்து பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 'பிளிக்ஸ்ஆன்லைன்' எனும் செயலி இரண்டு மாதங்களுக்கான இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்குகிறது. 

ஆனால் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும்போது, வாட்ஸ் ஆப் செயலியின் மூலம் பயனர்களின் தரவுகள் அனைத்தும் திருடப்படுவதாக இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'பிளிக்ஸ்ஆன்லைன்' செயலியை பதிவிறக்கம் செய்யும் போது திரை மேலடுக்கு (screen overlay), பேட்டரி தேர்வுமுறை புறக்கணித்தல் (battery optimization ignore) மற்றும் நோடிஃபிகேஷன் போன்ற மூன்று உள்ளீடுகளை பயனர்களிடம் கேட்கிறது.

இதில் திரை மேலடுக்கு ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலம் பயனர்களின் வாட்ஸ் ஆப்பை கண்காணித்து தரவுகள் திருடப்படுகின்றன. 

பயனர்களுக்கு தெரிந்தவர்களிடமிருந்து வாட்ஸ் ஆப்பிற்கு வரும் தனிப்பட்ட லிங்க் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதன் மூலம் இந்த தரவு திருட்டு ஆரம்பமாகிறது.

கோட்பாட்டளவில் ஒரு முறை பயனர்களின் வாட்ஸ் ஆப்பை கண்காணிக்கத் தொடங்கினால், அதன் பின்னர் வாட்ஸ் ஆப் குழுவில் பகிரப்படும் தகவல்கள், தனிப்பட்ட குறுஞ்செய்திகள் என அனைத்தையும் திருட இயலும் என்று  இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT