வணிகம்

ஏப். 23-ல் வெளியாகிறது ஸியோமியின் 'எக்ஸ்' சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

ஸியோமி நிறுவனத்தின் 'எக்ஸ்' சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் 23-ம் தேதி சந்தையில் வெளியாகும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN


ஸியோமி நிறுவனத்தின் 'எக்ஸ்' சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் 23-ம் தேதி சந்தையில் வெளியாகும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. 

அந்தவகையில் தற்போது 'எக்ஸ்' சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 23-ம் தேதி முதல் இந்திய சந்தைகளில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. 

இந்த 'எக்ஸ்' சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏற்கெனவே சீனாவில் வெளியான ரெட்மி கே-40 மற்றும் ரெட்மி கே-40 புரோ ஆகிய செல்போன்களைத் தழுவி எம்.ஐ. 11 எக்ஸ் மற்றும் எம்.ஐ. 11 எக்ஸ் புரோ  என்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு ஸ்மார்ட்போன்களும் 6.67 அங்குல தொடுதிரையையும், 800 சீரிஸ் ஸ்னாப்டிராகன் புராஸசரையும் கொண்டுள்ளது. இரண்டிலும் 4520mAh திறன் கொண்ட பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. 

ரெட்மி கே-40 ஸ்மார்ட்போன் நான்கு வகையான நினைவக திறனுடன் வெளியாகியுள்ளது. ரெட்மி கே40-யில் 48MP பின்பக்க கேமராவும், 20MP முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று ரெட்மி கே40 புரோ-வில் 64MP பின்பக்க கேமராவும், 20MP முன்பக்க கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் Mi Mix Fold என்ற மடிக்கக் கூடிய வகையிலான ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

அழகான ராட்சஷி... ஜாக்குலின்!

அடுத்த 3 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

உத்தரகண்ட்டில் மேகவெடிப்பு: மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரம்!

ஜம்மு - காஷ்மீரில் முதல்முறையாக பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எம்எல்ஏ கைது: வலுக்கும் கண்டனம்!

SCROLL FOR NEXT