வணிகம்

ஏடிஎம்-களில் பணப் பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் உயர்வு: இன்று அமல்

ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவர்த்தனையைத் தாண்டி பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வருகிறது.

DIN


ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவர்த்தனையைத் தாண்டி பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வருகிறது.

வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் கார்டுகளை வேறு வங்கியின் ஏடிஎம் மெஷின்களில் பயன்படுத்தும்போது  பணப் பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ. 15-இலிருந்து ரூ. 17 ஆக உயருகிறது. இதுவே பணமில்லாத பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ. 5-இலிருந்து ரூ. 6 ஆக உயருகிறது.

எனினும், வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் கார்டுகளை மற்ற வங்கியின் ஏடிஎம் மெஷின்களில் மாதத்துக்கு மூன்று முதல் ஐந்து முறை இலவசமாக பரிவர்த்தனை செய்துகொள்ளும் நடைமுறை தொடர்கிறது. 

இதன்மூலம், மெட்ரோ நகரங்களில் அதிகபட்சம் மூன்று முறை இலவசமாக பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். மற்ற நகரங்களில் அதிகபட்சம் ஐந்து முறை இலவசமாக பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.

முன்னதாக, அதிக பரிமாற்றக் கட்டணம் மற்றும் ஏடிஎம் பராமரிப்புச் செலவை ஈடுசெய்யும் வகையில், பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் அனுமதி அளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT