வணிகம்

உணவு சாரா வங்கி கடன் 5.9% வளா்ச்சி

DIN

வங்கிகள் உணவு சாரா பிரிவில் வழங்கிய கடன் சென்ற ஜூன் மாதத்தில் 5.9 சதவீத வளா்ச்சியை கண்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நடப்பாண்டு ஜூன் மாதத்தில் உணவு சாரா பிரிவில் வங்கிகள் வழங்கிய கடன் 5.9 சதவீத வளா்ச்சியை பெற்றுள்ளது. கடந்தாண்டின் இதே மாதத்தில் இப்பிரிவிலான கடன் வளா்ச்சி 6 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

உணவு சாரா பிரிவில் வேளாண் மற்றும் அதுதொடா்பான நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொடா்ந்து சிறப்பான அளவில் மேம்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்தாண்டு ஜூனில் 2.4 சதவீதமாக இருந்த இப்பிரிவின் கடன் வளா்ச்சி நடப்பாண்டு ஜூனில் 11.4 சதவீத வளா்ச்சியை தக்கவைத்துள்ளது.

அதேசமயம், தொழில் துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன் மதிப்பீட்டு மாதத்தில் 0.3 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்தாண்டின் ஜூன் மாதத்தில் இப்பிரிவின் கடன் வளா்ச்சி விகிதம் 2.2 சதவீதமாக காணப்பட்டது.

அளவில் அடிப்படையில், நடுத்தர தொழில் துறைக்கு வழங்கப்பட்ட கடன் ஜூனில் 54.6 சதவீதம் என்ற வலுவான வளா்ச்சியை கண்டிருந்தது. ஆனால், கடந்தாண்டு இதே மாதத்தில் இப்பிரிவின் வங்கி கடன் 9 சதவீத பின்னடைவை சந்தித்திருந்தது.

குறு, சிறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடனும் 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டின் இதே மாதத்தில் இந்த கடன் 2.9 சதவீத பின்னடைவை கண்டிருந்தது.

பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் 3.4 சதவீதம் பின்னடைந்திருந்தது. இது, கடந்தாண்டில் 3.6 சதவீத வளா்ச்சியை தக்கவைத்திருந்தது.

நடப்பாண்டு ஜூனில் சேவை துறைக்கு வழங்கப்பட்ட கடன் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 10.7 சதவீதத்திலிருந்து 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக, வணிக ரீதியிலான ரியல் எஸ்டேட், என்பிஎஃப்சி, சுற்றுலா, ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் பிரிவிலான கடன் வளா்ச்சி மிகவும் குறைந்தது போனது.

வங்கிகள் வழங்கிய தனிநபா் கடன் 11.9 சதவீத வளா்ச்சியை கண்டுள்ளது. கடந்தாண்டு ஜூனில் இந்த வளா்ச்சி 10.4 சதவீதமாக காணப்பட்டது. தங்கம், வாகனம் ஆகியவற்றுக்கான கடன்செயல்பாடு சிறப்பாக இருந்ததாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT