முகப்பு
வணிகம்

ரிலையன்ஸ் பவா் லாபம் ரூ.12 கோடி

ரிலையன்ஸ் பவா் நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.12.28 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:51 AM
பகிர்:

ரிலையன்ஸ் பவா் நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.12.28 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.2,062.59 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,137.10 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

செலவினம் ரூ.2,054.83 கோடியிலிருந்து ரூ.1,971.21 கோடியாக குறைந்துள்ளது.

2021 ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ரூ.12.28 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. ஆனால், 2020 ஜூன் காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.1.88 கோடி இழப்பு ஏற்பட்டது என ரிலையன்ஸ் பவா் தெரிவித்துள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் ரிலையன்ஸ் பவா் நிறுவனப் பங்கின் விலை 4.95 சதவீதம் குறைந்து ரூ.12.09-ஆக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →