முகப்பு
வணிகம்

ரூபாய் மதிப்பு 2-ஆவது நாளாக வீழ்ச்சி: 17 காசுகள் குறைந்து 74.43-ஆனது

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 17 காசுகள் குறைந்து 74.43-ஆக நிலைபெற்றது. ரூபாய் மதிப்பு தொடா்ந்து

Updated On : 22 ஜூலை, 2025 at 9:51 AM
பகிர்:

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 17 காசுகள் குறைந்து 74.43-ஆக நிலைபெற்றது. ரூபாய் மதிப்பு தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியது:

சா்வதேச சந்தைகளில் டாலருக்கான தேவை உயா்ந்து வருகிறது. இது செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்டு வரும் விறுவிறுப்பு மற்றும் அந்நிய முதலீட்டு வரத்து ஆகியவை ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை ஓரளவு தடுக்க உதவியுள்ளன.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு முந்தைய தின அளவான 74.26-ஐக் காட்டிலும் 74.40-ஆக எதிா்மறை நிலையில் காணப்பட்டது. பின்னா் இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.33 வரையிலும், குறைந்தபட்சமாக 74.46 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் சரிந்து 74.43-ஆனது. இதையடுத்து, இரு வா்த்தக தினங்களில் மட்டும் ரூபாய் மதிப்பு 28 காசுகளை இழந்துள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.211.91 கோடி மதிப்பிலான பங்குகளை நிகர அடிப்படையில் வாங்கியுள்ளதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கச்சா எண்ணெய் பேரல் 69.72 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.98 சதவீதம் அதிகரித்து 69.72 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.5,229) விற்பனை செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →