முகப்பு
வணிகம்

சென்செக்ஸ், நிஃப்டி 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு

வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று (ஆக. 24) பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்ந்தது.

Updated On : 24 ஆகஸ்ட், 2021 at 4:08 PM
சென்செக்ஸ், நிஃப்டி 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு
பகிர்:


வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று (ஆக. 24) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 403.19 புள்ளிகள் உயர்ந்து 55,958.98 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.73 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 128.15 புள்ளிகள் உயர்ந்து 16,624.60 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.78 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில்  நிறுவனங்களின் பங்குகளில் 21 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 11 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

அதிகபட்சமாக பஜாப் ஃபின்சர்வ் 7.91 சதவிகிதமும், டெக் மஹிந்திரா 3.41 சதவிகிதமும், டாடா ஸ்டீல் 3.39 சதவிகிதமும் எச்.டி.எஃப்.சி. வங்கி 2.31 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.