ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளிய ஸியோமி 
வணிகம்

'எம்ஐ' பிராண்ட் பெயரை நீக்கும் ஸியோமி நிறுவனம்

ஸியோமி நிறுவனம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஸ்மார்ட்போன் சந்தையில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்திவருகிற நிலையில் அதன் பிரத்தியோக பிராண்டான  'எம்ஐ' பெயரை இனி பயன்படுத்த போவதில்லை என தெரிவித்திருக்கிறா

DIN

ஸியோமி நிறுவனம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஸ்மார்ட்போன் சந்தையில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்திவருகிற நிலையில் அதன் பிரத்தியோக பிராண்டான  'எம்ஐ' பெயரை இனி பயன்படுத்த போவதில்லை என தெரிவித்திருக்கிறார்கள்.

ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் எழுச்சி சமீப காலமாக அதிகரித்து வரும் நேரத்தில் ஸியோமி கடந்த ஜூன் மாத காலாண்டு நிலவரப்படி உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் இடம் பெற்றிருந்தது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக ஸியோமி ஸ்மார்ட்போன்கள் 'எம்ஐ' என்கிற பெயரில் தான் வெளி வந்துகொண்டிருந்தது.

இந்நிலையில் சீனாவில் தன்னுடைய புதிய ஸ்மார்ட்போனான 'மிக்ஸ் 4' யை அறிமுகப்படுத்திய போது அதில் 'எம்ஐ' பெயர் இடம் பெறவில்லை.

இதுகுறித்து ஸியோமி நிறுவனத்தின் தரப்பிலிருந்து ' ஸ்மார்ட்போன்கள் மட்டும் அல்லாமல் தொலைக்காட்சிப் பெட்டி , டேப்லட்ஸ் , ஆடியோ உபகரணங்கள் , ஸ்மார்ட் டிவைஸ் போன்ற பல தளங்களிலும் ஸியோமி நிறுவனத்தின் சாதனங்கள் 'எம்ஐ' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய முயற்சியாக இனி வெளிவரும் மின்னணு சாதனங்களில் 'எம்ஐ' பெயரை சேர்க்காமல் வெளியிட இருக்கிறோம். அந்த அடையாளம் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவருகிற நிலையில் தற்போது அதை கைவிடுகிறோம் . மேலும்  2021 ஆம் ஆண்டு 3வது காலாண்டில் இருந்து 'எம்ஐ' என்கிற சாதனங்களில் 'ஸியோமி' எனப் பெயர் மாற்றப்படும்  ' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2011 ஆண்டு முதல் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் ஸியோமி நிறுவனம்  இதுவரை 80 கோடி போன்களை விற்பனை செய்து அசத்தியிருக்கிறது. தற்போது சாம்சங் , நோக்கியா போன்ற பெரும் நிறுவனங்களைக் கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் ஸியோமியின் வளர்ச்சியில் 'எம்ஐ' என்கிற பிராண்ட் என்றும் நிலைத்திருக்கும் என துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரட்டனப்பள்ளியில் துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி தொடக்கம்

ஒசூா் வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு

ஏழுமலையான் கோயிலுக்குள் நகை திருடிய 6 போ் கைது

காவலா்கள் குழந்தைகள் பிச்சாவரத்தில் படகு சவாரி

ஊத்தங்கரை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT