முகப்பு
வணிகம்

ஐபோன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஆப்பிளின் ஐபோன் 13 சீரிஸ் செப்டம்பர் 14ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 28 ஆகஸ்ட், 2021 at 3:29 PM
கோப்புப்படம்
பகிர்:

ஆப்பிளின் ஐபோன் 13 சீரிஸ் செப்டம்பர் 14ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

என்ன தான் ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும் பலருக்கு ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கும். அதேபோல், அடுத்த ஐபோன் எப்போது விற்பனைக்கு வரும் என எண்ணும் ரசிகர்களும் இங்குள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், ஆப்பிளின் ஐபோன் 13 சீரிஸ் செப்டம்பர் 14ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முன்பதிவு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் விற்பனைக்கு 24ஆம் தேதி வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஐபோன் 13 சீரிஸ் ஏற்கனவே சீனாவில் உள்ள இ-வர்த்தக இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐபோன் 12 சீரிஸ் போலவே 13 சீரிஸூம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 13 சீரிஸ் மினி 5.4 இன்ச் அளவிலும், 13 சீரிஸ் மற்றும் 13 ப்ரோ 6.1 இன்ச் அளவிலும் 13  ப்ரோ மேக்ஸ் 6.7 இன்ச் அளவிலும் விற்கப்படவுள்ளது. ஐபோன் 13 சீரிஸ் TSMC's 5nm+ ப்ராசசரில்  ஏ15 சிப் பொறுத்தப்பட்டு  வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.