வணிகம்

டேப்லெட் சந்தையில் களமிறங்கும் விவோ நிறுவனம்

DIN

தனது முதல் டேப்லெட்டை அடுத்தாண்டின் முதல் பாதியில் விவோ நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் கொடி கட்டி பறக்கும் விவோ நிறுவனம், டேப்லெட்டை சந்தையில் கால் பதிக்கவுள்ளது. தனது முதல் டேப்லெட்டை அடுத்தாண்டின் முதல் பாதியில் விவோ நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

விவோ நிறுவனத்தின் துணை நிர்வாக தலைவரான ஹு பைஷன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், விவோ டேப்லெட் விற்பனைக்கு வரவுள்ளதை உறுதிச் செய்தார். ஆனால், இதுகுறித்த கூடுதலான விவரங்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. விவோ பேட் என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக விற்கபடவுள்ளதாக பைஷன்  குறிப்பிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

விவோவின் துணை நிறுவனமான iQOO-வும் டேப்லெட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் டேப்லெட் சந்தையில் விரைவில் களமிறங்கவுள்ளதாகச் செய்தி வெளியாகியிருந்தது. டேப்லெட்களை சியோமி நிறுவனம் ஏற்கனவே விற்பனைக்கு விட்டுள்ளது. ஓப்போ, ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் வரும் நாள்களில் டேப்லெட்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT