பங்குச்சந்தை வணிகம் ஏற்றத்துடன் தொடக்கம்
ஐந்து நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று (ஜன.29) காலை உயர்வுடன் தொடங்கியது.
5 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று (ஜன.29) காலை உயர்வுடன் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 159.46 புள்ளிகள் உயர்ந்து 47,033.82 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.14 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52.25 புள்ளிகள் உயர்ந்து 13,869.80 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.13 சதவிகிதம் உயர்வாகும்.
கடந்த 5 நாள்களாக சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை வர்த்தகம் வாரத்தின் இறுதி நாளான இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது.
ஐந்து நாள்கள் வா்த்தகத்தில் மட்டும் சென்செக்ஸ் 2,917.76 புள்ளிகளையும், நிஃப்டி 827.15 புள்ளிகளையும் இழந்துள்ளன.
இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.
அதிகபட்சமாக எம்&எம் 4.12 சதவிகிதமும், இந்துஸ்இந்த் வங்கி 3.54 சதவிகிதமும், பஜாஜ் பைனான்ஸ் 1.42 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.