முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 380 புள்ளிகள் உயர்வு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 382.95 புள்ளிகள் உயர்ந்து 52,232.43 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.74 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 114.15  புள்ளிகள் உயர்ந்து 15,690.35 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.73 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 22 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளன. 

அதிகபட்சமாக டைட்டன் கம்பெனி 6.69 சதவிகிதமும், ஓஎன்ஜிசி 4.16 சதவிகிதமும், எல் & டி 2.64 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி 1.82 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 1.80 சதவிகிதமும் உயர்ந்திருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →