முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவு: சென்செக்ஸ் 228 புள்ளிகள் உயர்வு

வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூன்7) பங்குச்சந்தை வணிகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 228 புள்ளிகள் உயர்ந்தது.

Updated On : 7 ஜூன், 2021 at 4:16 PM
பங்குச்சந்தையில் ஏற்றம்: சென்செக்ஸ் 228 புள்ளிகள் உயர்வு
பகிர்:

வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூன்7) பங்குச்சந்தை வணிகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 228 புள்ளிகள் உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 228.46 புள்ளிகள் உயர்ந்து 52,328.51 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.44 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81.40  புள்ளிகள் உயர்ந்து 15,751.65 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.52 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 22 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. அவற்றில் அதிகபட்சமாக பவர் கிரிட் நிறுவனம் 4.44 சதவிகிதமும், என்டிபிசி 4.07 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 2.78 சதவிகிதமும் ரிலையன்ஸ் பங்குகள் 1.68 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.