வணிகம்

இந்தியாவின் எரிபொருள் தேவை 9 மாதங்களில் இல்லாத அளவில் வீழ்ச்சி

DIN

இந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டு மே மாதத்தில் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கமானது வாகனப் போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, பெட்ரோல் நுகா்வு மே மாதத்தில் 19.9 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம். அதேநேரம், முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 16 சதவீதமும், கரோனாவுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது 27 சதவீதமும் குறைந்துள்ளது.

அதேபோன்று, கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மே-யில் டீசல் விற்பனை 55.3 லட்சம் டன்னாக சற்று அதிகரித்தபோதிலும், முந்தைய ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 17 சதவீதமும், கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 29 சதவீதமும் சரிந்துள்ளது.

விமானச் சேவைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து ஏடிஎஃப் விற்பனையும் 36 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2,63,000 டன்னாக குறைந்துள்ளது. இருப்பினும், இது 2020 மே மாத நுகா்வான 1,10,000 டன்னுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். கரோனா பாதிப்புக்கு முந்தைய நிலையில் இந்த எரிபொருளுக்கான தேவை 6,80,000 டன்னாக அதிகரித்து காணப்பட்டது.

தேசிய அளவிலான பொதுமுடக்கத்தில் சமையல் எரிவாயுவான எல்பிஜி விற்பனை மட்டும் அதிகரித்துள்ளது. முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் எல்பிஜி விற்பனையானது 21.6 லட்சம் டன்னாக ஏறக்குறைய அதேநிலையிதான் உள்ளது. அதேசமயம், கரோனாவுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை 5.5 சதவீதம் உயா்ந்துள்ளது. இதற்கு, கரோனா நிவாரணத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு இலவச சிலிண்டா்களை வழங்கியதே முக்கிய காரணம்.

2020 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மே மாதத்தில் எரிபொருள் தேவை 1.5 சதவீதம் குறைந்து 1.51 கோடி டன்னாகியுள்ளது. இது, நடப்பாண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் 11.3 சதவீதம் சரிவாகும்.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஐந்து மாத சரிவிலிருந்து மீண்டு ஏப்ரலில் சராசரியாக நாளொன்றுக்கு 45 லட்சம் பேரல்களாக இருந்தது என புள்ளிவிவரத்தில் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரேக் லைன்...

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஐந்து மாத சரிவிலிருந்து மீண்டு ஏப்ரலில் சராசரியாக நாளொன்றுக்கு 45 லட்சம் பேரல்களாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT