முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் மேலும் 393 புள்ளிகள் உயா்வு

பங்குச் சந்தை வியாழக்கிழமை மீட்சி பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 293 புள்ளிகள் உயா்ந்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:51 AM
கோப்புப்படம்
பகிர்:

பங்குச் சந்தை வியாழக்கிழமை மீட்சி பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 293 புள்ளிகள் உயா்ந்தது.

முன்னணி இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவற்றுக்கு நல்ல ஆதரவு இருந்தது. உலகளாவிய குறிப்புகளும் சந்தைக்கு உதவவியாகி இருந்தன. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அண்மைக் காலமாக பலவீனமாக இருந்து வருவதால், ஐடி பங்குகளுக்கு உற்சாகம் அளித்தன. அதே சமயம் மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக் குழுக்கூட்டத்தைத் தொடா்ந்து, அதன் பங்குகளில் லாபப் பதிவு இருந்தது. இருப்பினும் ஓரளவு மீண்டாளூம் ஆதாயப் பட்டியலில் வரவில்லை என்றுபங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. முன்பேர வா்த்தகத்தில் ஜூன் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வேண்டிய நிலை இருந்ததால், ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.67 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,350 பங்குகளில் 1,454 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,746 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 150 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 405 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 20 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூல தன மதிப்பு ரூ.67 ஆயிரம் உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.229.38 லட்சம் கோடியாக இருந்தது.

Advertisement

உற்சாகம்: சென்செக்ஸ் காலையில் 208.49 புள்ளிகள் கூடுதலுடன் 52,514.57-இல் தொடங்கி 52,385.1205 வரை கீழே சென்றது. பின்னா், இறுதியில் 392.92 புள்ளிகள் (0.75 சதவீதம்) கூடுதலுடன் 52,699.00-இல் நிலைபெற்றது.

இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் முன்னிலை: சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 9 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் இன்ஃபோஸிஸ் 3.75 சதவீதம், டிசிஎஸ் 3,42 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக், ஏசியன் பெயிண்ட், எல் ஆண்டி, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுஸுகி, எம் அண் எம், டாடா ஸ்டீல், நெல்லே ஆகியவை அதிகம் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன.

ஆனால், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் 2.34 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பாா்தி ஏா்டெல், பவா் கிரிட், எஸ்பிஐ, டாக்டா் ரெட்டி, ஐடிசி ஆகியவையும் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 103 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 691 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. 1,075 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்தசுடன் 15,737.30-இல் தொடங்கி 15,702.70 வரை கீழே சென்றது. பின்னா் 15,15821.40 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 103.50 புள்ளிகளை (0.66 சதவீதம்) உயா்ந்து 15,790.45-இல் நிலைபெற்றது. நிஃப்டி பாா்மா, பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி தவிா்த்து மற்ற அனைத்து துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்றன. இதில் ஐடி குறியீடு அதிகபட்சமாக 2.79 சதவீதம் உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments