முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் நிறைவு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

Updated On : 5 மே, 2021 at 4:24 PM
பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் நிறைவு
பகிர்:

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 424.04 புள்ளிகள் உயர்ந்து 48,677.55 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.88 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 121.35 புள்ளிகள் உயர்ந்து 14,617.85 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.84 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 27 நிறுவனங்களில் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. மீதமுள்ள 3 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

அதிகபட்சமாக சன் பார்மா 5.96 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி 2.41 சதவிகிதமும், இண்டஸ்இந்த் வங்கி 2.33 சதவிகிதமும், கோட்டக் வங்கி 2.20 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.