வணிகம்

பங்குச்சந்தையில் மந்தநிலை: சென்செக்ஸ் 290 புள்ளிகள் சரிவு

DIN

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 290 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 290.69 புள்ளிகள் சரிந்து 49,902.64 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.58 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77.95 புள்ளிகள் சரிந்து 15,030.15 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.84 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்ந்து காணப்பட்டன. எஞ்சிய 20 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிவடைந்தது.

இதில் அதிகபட்சமாக பஜாஜ் பின்சர்வ் 1.77 சதவிகிதமும், எச்டிஎப்சி 1.70 சதவிகிதமும் எம் & எம் 1.66 சதவிகிதமும், பாரதி ஏர்டெல் 1.49 சதவிகிதமும் சரிந்துள்ளன.

சன் பார்மா, நெஸ்ட்லே இந்தியா, டெக் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே பட்டியலில் அதிகபட்சமாக உயர்ந்து காணப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT