முகப்பு
வணிகம்

பிஎன்பி ஹவுஸிங் ஃபைனான்ஸ்: லாபம் ரூ.235 கோடி

 பிஎன்பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.235 கோடியாக இருந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

 பிஎன்பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.235 கோடியாக இருந்தது.

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) துணை நிறுவனமான பிஎன்பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மூன்று மாத காலத்தில் நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் ரூ.503 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.651 கோடியுடன் ஒப்பிடுகையில் 23 சதவீதம் குறைவாகும்.

நிகர லாபம் ரூ.313 கோடியிலிருந்து 25 சதவீதம் குறைந்து ரூ.235 கோடியானது.

மே 31-இல் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ.4,000 கோடிக்கான முன்னுரிமை பங்கு வெளியீட்டை தொடர வேண்டாம் என இயக்குநா் குழு அக்டோபா் 14-இல் முடிவெடுத்ததாக பிஎன்பி ஹவுஸிங் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →