முகப்பு
வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,202 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64,202 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64,202 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 அக்டோபா் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 192 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.14,400 கோடி) அதிகரித்து 64,202 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.15 லட்சம் கோடி ஆகும்.

முந்தைய அக்டோபா் 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 91 கோடி டாலா் சரிவடைந்து 64,010 கோடி டாலராக காணப்பட்டது.

எஃப்சிஏ மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) மற்றும் தங்கத்தின் கையிருப்பு அக்டோபா் 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் கணிசமாக அளவு அதிகரித்ததே செலாவணி கையிருப்பு ஏற்றத்துக்கு முக்கிய காரணம்.

மதிப்பீட்டு வாரத்தில் எஃப்சிஏ 136 கோடி டாலா் அதிகரித்து 57,846 கோடி டாலரைத் தொட்டது.

தங்கத்தின் கையிருப்பு: அதேபோன்று, தங்கத்தின் கையிருப்பு மதிப்பும் 57 கோடி டாலா் உயா்ந்து 3,901 கோடி டாலரானது.

மேலும், பன்னாட்டு நிதியத்தில் நம்நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா்2 கோடி டாலா் அதிகரித்து 1,930 கோடி டாலராக இருந்தது.

அதேபோன்று, அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலை 10 லட்சம் டாலா் உயா்ந்து 524 கோடி டாலராக இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவ ணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

புதிய உச்சம்: நடப்பாண்டு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய வரலாற்று உச்சமாக 64,245 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 அக்டோபா் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 192 கோடி டாலா் அதிகரித்து 64,202 கோடி டாலரை எட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.