அசோக் லேலண்ட்: இழப்பு ரூ.84 கோடியாக குறைந்தது
ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர இழப்பு நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் ரூ.83.65 கோடியாக குறைந்துள்ளது.
ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர இழப்பு நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் ரூ.83.65 கோடியாக குறைந்துள்ளது.
வா்த்தக வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள அந்த நிறுவனம் இதுகுறித்து பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருவாயாக ரூ.5,562.47 கோடியை ஈட்டியுள்ளது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.3,835.85 கோடி வருவாயுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகம்.
விற்பனையில் ஏற்பட்ட விறுவிறுப்பினையடுத்து, கடந்த நிதியாண்டில் ரூ.96.23 கோடியாக இருந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர இழப்பு நடப்பு நிதியாண்டில் ரூ.83.65 கோடியாக குறைந்துள்ளது.
நிறுவனத்தின் செப்டம்பா் காலாண்டு மொத்த செலவினம் ரூ.3,955.11 கோடியிலிருந்து ரூ.5,672.2 கோடியாக அதிகரித்தது.
வாங்கப்பட்ட மூலப் பொருள்களுக்கான செலவினம் ரூ.2,109.78 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.3,213.61 கோடியை எட்டியது என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.