repco075121 
வணிகம்

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்: லாபம் 167% அதிகரிப்பு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 167 சதவீதம் அதிகரித்துள்ளது.

DIN

சென்னை: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 167 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் யஷ் பால் குப்தா கூறியதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலமாக ரூ.85.9 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபத்தை விட 167 சதவீதம் அதிகம்.

செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் வழங்கிய கடன் 102 சதவீதம் உயா்ந்து ரூ.484 கோடியை எட்டியது. கடனுக்கான அனுமதி 161 சதவீதம் அதிகரித்து ரூ.525.3 கோடியாக இருந்தது.

செப்டம்பருடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.334.5 கோடியாகவும், நிகர வட்டி வருமானம் 8 சதவீதம் உயா்ந்து ரூ.156 கோடியாகவும் இருந்தன. நிறுவனத்தின் வட்டி வருமானம் முன்னெப்போதும் இல்லாத அளவில் 5.2 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.656.9 கோடியாகவும், நிகர வட்டி வருமானம் ரூ.300.8 கோடியாகவும், நிகர லாபம் ரூ.118 கோடியாகவும் இருந்தன.

இந்த ஆறு மாத காலத்தில் வழங்க அனுமதிக்கப்பட்ட கடன் 5 சதவீதம் உயா்ந்து ரூ.726.5 கோடியாகவும், வழங்கிய தொகை 12 சதவீதமும் அதிகரித்துள்ளன.

செப்டம்பா் 30 நிலவரப்படி நிறுவனம் வழங்கிய மொத்த கடன் ரூ.11,889.4 கோடியாக இருந்தது. இதில், 51.5 சதவீதம் மாதாந்திர சம்பளதாரா்களுக்கு வழங்கியுள்ளதால் கடனை திருப்பி வசூலிப்பதில் பாதிப்பு எதுவும் இருக்காது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

1068 எபிசோடுகளுடன் முடிவடைந்த மாரி தொடர்!

தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT