முகப்பு
வணிகம்

முடங்கிய ஜீரோத்தா செயலி: பங்குதாரர்கள் அதிர்ச்சி

இந்தியப் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்க விற்க உதவும் தரகுச் செயலியான ஜீரோத்தா கடந்த 30 நிமிடங்களாக முடங்கியிருப்பதால் பங்குதாரர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:53 AM
ஜீரோத்தா
பகிர்:

இந்தியப் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்க விற்க உதவும் தரகுச் செயலியான ஜீரோத்தா கடந்த 30 நிமிடங்களாக முடங்கியிருப்பதால் பங்குதாரர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

ஜீரோத்தா நிறுவனம் பங்குச்சந்தையில் தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்து தரகுகளின் மூலம் வணிகம் செய்து வருகிறது.

பங்குச் சந்தையில் ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்பதால் பங்குதாரர்கள் தொடர்ந்து வாங்க , விற்க இருக்கும் பங்குகளின் ஏற்ற இறக்கத்தை கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

இந்நிலையில் கடந்த சில நிமிடங்களாக ஜீரோத்தா செயலி முடங்கியிருப்பதால் அதைப் பயன்படுத்தும் பங்குதாரர்கள் பங்குகளின் நிலவரம் தெரியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் ஜீரோத்தா நிறுவனம் கடுமையாக இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →