பங்குச்சந்தைப் பட்டியலில் இணைந்த ‘பேடிஎம்’ நிறுவனம்! 
வணிகம்

பங்குச்சந்தைப் பட்டியலில் இணைந்த ‘பேடிஎம்’ நிறுவனம்!

இணையப் பணப்பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றான ‘பேடிஎம்’ நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

DIN

இணைய பணப்பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றான ‘பேடிஎம்’ நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவைத் தலைமையிடமாக வைத்துச் செயல்படும் இணையப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான ‘பேடிஎம்’ தன்னுடைய முதலீடுகளை அதிகரிக்க ஐபிஓ (தனிநபர் முதலீடு) முறையில் பங்குச்சந்தையில் நேற்று(நவ.18) இணைந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகமான பேடிஎம் நிறுவனம் இதுவரை அனைத்து விதமான இணையப் பரிவர்த்தனையிலும் தவிர்க்க முடியாத செயலியாக உருவாகியிருக்கிற நிலையில் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மேலும் 18,000 கோடி திரட்டுவதற்காக பங்குச்சந்தையின் பட்டியலில் இணைந்திருக்கிறது.

ஒரு பங்கின் விலை ரூ.2080 - 2150 என ஆரம்பித்திருந்தாலும் தற்போது அந்நிறுவனம் தொடர் சரிவால் 30 சதவீதம் குறைந்து ஒரு பங்கு ரூ.1560க்கு விற்பனையாகிவருகிறது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தில் சீனாவின் பிரபல அலிபாபா நிறுவனம் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT