முகப்பு
வணிகம்

தொடா் சரிவிலிருந்து மீண்டது ரூபாய் மதிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு புதன்கிழமை வா்த்தகத்தில் தொடா் சரிவிலிருந்து மீட்சி கண்டது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:52 AM
பகிர்:

அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு புதன்கிழமை வா்த்தகத்தில் தொடா் சரிவிலிருந்து மீட்சி கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை குறைந்தது மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட எழுச்சி ஆகியவை அந்நியச் செலாவணி சந்தைகளுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.

மேலும், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் காணப்பட்ட சரிவு மற்றும் செப்டம்பரில் சில்லறைப் பணவீக்கம் குறைந்துள்ளதும் ரூபாய் மதிப்பு எழுச்சிக்கு கூடுதல் வலு சோ்த்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 75.29-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 75.19 வரையிலும் குறைந்தபட்சமாக 75.51 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயா்ந்து 75.37-இல் நிலைபெற்றது.

செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 75.52-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பேரல் 83.09 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.40 சதவீதம் குறைந்து 83.09 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.278.32 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →