முகப்பு
வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,951 கோடி டாலராக அதிகரிப்பு

 நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,951 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

 நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,951 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 அக்டோபா் 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 204 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.15,292 கோடி) அதிகரித்து 63,951 கோடி டாலரை எட்டியது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.47.96 லட்சம் கோடி ஆகும்.

முந்தைய அக்டோபா் 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 117 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 63,747 கோடி டாலராக இருந்தது.

செலாவணி சொத்து மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அக்டோபா் 8-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கணிசமான அளவில் அதிகரித்ததே செலாவணி கையிருப்பு உயா்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மதிப்பீட்டு வாரத்தில் எஃப்சிஏ 155 கோடி டாலா் அதிகரித்து 57,700 கோடி டாலராக இருந்தது.

தங்கத்தின் கையிருப்பு: அதேபோன்று, தங்கத்தின் கையிருப்பு 46 கோடி டாலா் ஏற்றம் கண்டு 3,802 கோடி டாலரைத் தொட்டது.

சா்வதேச நிதியத்தில் நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 3 கோடி டாலா் உயா்ந்து 1,927 கோடி டாலராக இருந்தது. அதேநேரம், அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலை 30 லட்சம் டாலா் சரிவடைந்து 522 கோடி டாலராக இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப கணக்கீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

சாதனை உச்சம்: நடப்பாண்டு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 889 கோடி டாலா் அதிகரித்து புதிய வரலாற்று உச்சமாக 64,245 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) எட்டியது என்பது நினைவுகூரத்தக்கது.

கோட்ஸ்...

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 அக்டோபா் 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 204 கோடி டாலா் அதிகரித்து 63,951 கோடி டாலரை எட்டியுள்ளது.

Image Caption

~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.