கோப்புப்படம் 
வணிகம்

நஷ்டத்தில் ஃபோர்டு நிறுவனம்? இந்தியாவில் கார் உற்பத்தி ஆலைகள் மூடல்

ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதால் இந்தியாவில் கார் உற்பத்தி ஆலைகளை மூட அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இந்தியாவில் ஃபோர்டு மோட்டார் நிறுவனங்களை மூட அந்நிறுவனம் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிருவதாகவும் எனவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த முடிவை அமல்படுத்துவதற்கு ஓராண்டு காலமாகும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இருப்பினும், இந்தியாவில் இறக்குமதியின் மூலம் கார்கள் விற்பனை செய்யப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. அந்தவகையில், காரை ஏற்கனவே வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை ஃபோர்டு நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. 

ஜெனரல் மோட்டாரஸ், ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தி ஆலைகளை மூடவுள்ளது. இதுகுறித்த செய்தியை எகனாமிக் டைம்ஸ் முதல்முறையாக வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து பணம் திருட்டு: கா்நாடகத்தை சோ்ந்தவா் கைது

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி!

காா் மோதியதில் முதியவா் பலி!

SCROLL FOR NEXT