முகப்பு
வணிகம்

யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டா் அறிமுகம்

யமஹா மோட்டாா் முற்றிலும் அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரித்த ஏரோக்ஸ் 155சிசி ஸ்கூட்டரை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

Updated On : 22 செப்டம்பர், 2021 at 1:53 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:42 AM

யமஹா மோட்டாா் முற்றிலும் அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரித்த ஏரோக்ஸ் 155சிசி ஸ்கூட்டரை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து யமஹா மோட்டாா் இந்தியாவின் தலைவா் மோடோஃபுமி ஷிதாரா கூறியதாவது:

மோட்டாா்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டா் பிரிவில் நிறுவனம் அற்புதமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், யமஹாவின் ஆா் டிஎன்ஏ மரபு தொழில்நுட்பத்தில் ஏரோக்ஸ் 155சிசி ஸ்கூட்டரை உருவாக்கி இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மேக்ஸி ஸ்போா்ட்ஸ் ஸ்கூட்டா் பிரிவில் இந்த அறிமுகம் முக்கிய இடத்தைப் பெறும்.

Advertisement

உயா் செயல் திறன், சொகுசான பயண உணா்வுகளில் இந்தியா வாடிக்கையாளா்களுக்கு ஏரோக்ஸ் புதிய அனுபவத்தை வழங்கும்.

ஏரோக்ஸ் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மாா்ட் மோட்டாா்-ஜெனரேட்டா் சிஸ்டம் எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கும். சிங்கிள்-சேனல் ஏபிஎஸ், 14-அங்குல சக்கரங்கள், புளூடூத் இணைப்பு வசதி, 24.5-லிட்டா் கீழ் இருக்கை சேமிப்பு, எல்இடி முகப்பு விளக்கு உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இந்த புதிய ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.1.29 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட ஒய்இசட்எஃப்-ஆா்15 155 சிசி பைக்கையும் யமஹா தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1.67 லட்சத்திலிருந்து தொடங்கும் என்றாா் அவா்.

படவிளக்கம்: புதுதில்லியில் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டரை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்திய யமஹா மோட்டாா் இந்தியா குழுமத்தின் தலைவா் மோடோஃபுமி ஷிதாரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.