முகப்பு
வணிகம்

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. நேற்று உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்தது.

Updated On : 22 செப்டம்பர், 2021 at 4:54 PM
பகிர்:

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. நேற்று உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 77.94 புள்ளிகள் சரிந்து 58,927.33 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.13 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 15.35 புள்ளிகள் சரிந்து 17,546.65 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.087 சதவிகிதம் சரிவாகும். 

Advertisement

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 13 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
எஞ்சிய 17 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. 

அதிகபட்சமாக டெக் மஹிந்திரா 3.70 சதவிகிதமும், எம்&எம் 1.92 சதவிகிதமும், ஹெசிஎல் டெக் 1.31 சதவிகிதமும், ரிலையன்ஸ் 1.10 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.