வணிகம்

ஐசிஐசிஐ வங்கி: லாபம் ரூ.7,019 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த ஐசிஐசிஐ வங்கி கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ரூ.7,019 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த ஐசிஐசிஐ வங்கி கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ரூ.7,019 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை கூறியுள்ளதாவது:

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் செயல்பாட்டின் மூலமாக மொத்தம் ரூ.27,412 கோடி வருவாய் ஈட்டியது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்துடன் ஈட்டிய வருவாய் ரூ.23,953 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் நிகர லாபம் ரூ.4,403 கோடியிலிருந்து 59 சதவீதம் அதிகரித்து ரூ.7,019 கோடியைத் தொட்டது.

நிகர வட்டி வருவாய் ரூ.10,431 கோடியிலிருந்து ரூ.12,605 கோடியாக 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

மொத்த வாராக் கடன் 4.96 சதவீதத்திலிருந்து 3.60 சதவீதமாகவும், நிகர அளவிலான வாராக் கடன் 1.14 சதவீதத்திலிருந்து 0.76 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

SCROLL FOR NEXT