வணிகம்

இன்ஸ்டாகிராமில் இனி ட்விட்டர் வசதி: புதிய அம்சம் என்ன?

DIN


இன்ஸ்டாகிராமில் பதிவுகளை முதன்மைப்படுத்தி (pin) வைத்துக்கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கான சோதனைகளில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் களமிறங்கியுள்ளது.

உலகில் அதிக அளவு மக்கள் பயன்படுத்தும் ட்விட்டர், முகநூல் ஆகிய சமூக வலைதளங்களில் பயனர்கள் தங்களது பதிவுகளை (Pin) முதன்மைப்படுத்தி வைத்துக்கொள்ளும் வசதி உள்ளது.

அதபோல் இன்ஸ்டாகிராம் செயலியிலும் பதிவுகளை முதன்மைப்படுத்தி வைத்துக்கொள்ளும் அம்சம் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கான சோதனையில் ஈடுபட்டுள்ள பயனர்களுக்கு அவர்கள் இடும் பதிவுகளுக்கு அருகில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்துவதன் மூலம் இந்த அம்சத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மூன்று புள்ளிகளை அழுத்துவதன் மூலம் Pin to your profile என்ற விருப்பம் திரையில் தோன்றும். அதனை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட பதிவை இன்ஸ்டாகிராமில் முதன்மைப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். 

தற்போது ஸ்டோரிக்களை முதன்மைப்படுத்தி வைத்துக்கொள்ளும் அம்சம் இன்ஸ்டாகிராமில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT