பங்குச்சந்தையில் அசத்தல்: ரூ.3 லட்சம் கோடி மதிப்புடன் அதானி எண்டர்பிரைசஸ்!
அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பைப் பெற்றுள்ளது.
அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பைப் பெற்றுள்ளது.
அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர்.
இதையும் படிக்க: உலகின் 4-வது பெரிய பணக்காரர் அதானி! பில்கேட்ஸைப் பின்தள்ளினார்
இந்நிலையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பை அடைந்துள்ளது. இதன் மூலம் இந்த இலக்கை எட்டிய 4-வது பெரிய நிறுவனம் என்கிற சாதனையையும் அடைந்துள்ளது.
மேலும், கடந்த 6 மாதங்களில் அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 53 சதவீதம் அதிகரித்து தற்போது, ரூ.2,673 ஆக உயர்ந்துள்ளது.
அதானி 5ஜி ஏலத்தில் ஏலத்தில் பங்கேற்றுள்ள நிலையில், அதானி பங்குகளின் விலைகள் அதிகரிக்க துவங்கியுள்ளன.