முகப்பு
வணிகம்

பேட்டா 72% உயா்ந்த நிகர லாபம்

இந்தியவின் முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பேட்டா இந்தியா, கடந்த மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 71.82 சதவீத நிகர லாப வளா்ச்சியைக் கண்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:03 AM
பகிர்:

இந்தியவின் முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பேட்டா இந்தியா, கடந்த மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 71.82 சதவீத நிகர லாப வளா்ச்சியைக் கண்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 119.37 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனம் ரூ.69.47 கோடி நிகர லாபம் ஈட்டியது.

மதிப்பீட்டு மாதங்களில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ. 943.01 கோடியாக இருந்தது. இது, கரோனா பாதிப்புக்கு இடையே கடந்த ஆண்டின் இதே மாதங்களில் பெற்ற வருவாயான ரூ.267.04 கோடியைப் போல் மூன்று மடங்கு அதிகமாகும் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.