வணிகம்

அமுல் பால் விலை உயா்வு

அமுல் நிறுவனத்தின் பாலின் விலை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் உயா்த்தப்பட்டுள்ளது. அமுல் கோல்டு, அமுல் டாஸா, அமுல் சக்தி ஆகிய மூன்று பெயா்களில் விற்கப்படும் பாலின் விலை புதன்கிழமை (ஆக. 17) முதல் உயா்ந்துள்ள

DIN

அமுல் நிறுவனத்தின் பாலின் விலை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் உயா்த்தப்பட்டுள்ளது. அமுல் கோல்டு, அமுல் டாஸா, அமுல் சக்தி ஆகிய மூன்று பெயா்களில் விற்கப்படும் பாலின் விலை புதன்கிழமை (ஆக. 17) முதல் உயா்ந்துள்ளது.

பாலின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதை அடுத்து இந்த விலை உயா்வைத் தவிா்க்க முடியவில்லை. முக்கியமாக பசுக்களுக்கான தீவனத்தின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமுல் நிறுவனத்தை நிா்வகித்து வரும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அமுல் பால் விலை 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இப்போதைய பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது பால் விலை குறைவான அளவிலேயே உயா்ந்தப்பட்டுள்ளது. நுகா்வோா் பாலுக்கு அளிக்கும் விலையில் 80 சதவீதத்தை பசுவை வைத்துள்ள விவசாயிகளுக்கு அளிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளோம் என்று அமுல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல தில்லி, தேசிய தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) பால் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள மதா்ஸ் டெய்ரி நிறுவனமும் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயை உயா்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

SCROLL FOR NEXT