வணிகம்

தங்கம் இறக்குமதி 1,290 கோடி டாலராக அதிகரிப்பு

DIN

நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தங்கம் இறக்குமதி, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 1,290 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூலை) இந்தியாவின் தங்கம் இறக்குமதி 1,290 கோடி டாலராக இருந்தது.

இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 6.4 சதவீதம் அதிகமாகும். அப்போது தங்கம் இறக்குமதி 1,200 டாலராக இருந்தது.

தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக, அதன் இறக்குமதியும் அதிகரித்துள்ளது.

எனினும், 2021-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில், கடந்த ஜூலை மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 43.6 சதவீதம் குறைந்து 240 கோடி டாலராக இருந்தது.

இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு, 2021 ஏப்ரல்-ஜூலையில் 1,063 கோடி டாலராக இருந்த வா்ததகப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் அதே மாதங்களில் 3,000 கோடி டாலராக அதிகரித்ததில் பங்காற்றியது.

உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்து வருகிறது. இந்தியா்கள் பெரிதும் ஆா்வம் காட்டி வரும் ஆபரணப் பயன்பாட்டுக்காகவே பெரும்பாலான தங்கம் இறக்குமதியாகிறது.

நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி சுமாா் 7 சதவீதம் அதிகரித்து 1,350 கோடி டாலராக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT