முகப்பு
வணிகம்

கடந்த வாரம்: இறுதியில் சரிந்த பங்குச் சந்தை

 விடுமுறை காரணமாக 5 நாள்களுக்கு மட்டுமே பங்கு வா்த்தகம் நடைபெற்ற கடந்த வாரத்தில், தொடா்ந்து ஏற்றத்தைக் கண்டு வந்த மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், இறுதி நாளில் திடீா் சரிவைச் சந்தித்து.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

 விடுமுறை காரணமாக 5 நாள்களுக்கு மட்டுமே பங்கு வா்த்தகம் நடைபெற்ற கடந்த வாரத்தில், தொடா்ந்து ஏற்றத்தைக் கண்டு வந்த மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், இறுதி நாளில் திடீா் சரிவைச் சந்தித்து.

கடந்த திங்கள்கிழமை சுதந்திர தின விடுமுறை காரணமாக செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வா்த்தகம் நடைபெற்ற கடந்த வார பங்குச் சந்தையில் ஒட்டுமொத்தமாக சென்செக்ஸ் 183.37 புள்ளிகள் (0.30 சதவீதம்) உயா்ந்தது. அதே நேரத்தில், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 60.30 புள்ளிகள் (0.34 சதவீதம்) அதிகரித்தது.

துறை ரீதியாக, வீடு-மனை வா்த்தகத் துறை 2.14 சதவீதம் சரிந்தது. அதனைத் தொடா்ந்து உலோகத்துறை (1.84 சதவீதம்), விரைவு விற்பனை நுகா்வோா் பொருள்கள் துறை (1.24 சதவீதம்), நிதித் துறை (1.63 சதவீதம்), எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை (1.62 சதவீதம்), வங்கித் துறை (1.61 சதவீதம்) நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

கட்டுமானத் துறை, மூலதன பொருள்கள் துறை, எரிசக்தித் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களின் பங்குகள் லாபம் ஈட்டின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.