முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சியுடன் நிறைவு

வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் 861 புள்ளிகள் வரை சரிந்தது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:49 PM
கோப்புப் படம்
பகிர்:

பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன. வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் 861 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 861.2 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,972.62 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.46 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 246 புள்ளிகள் சரிந்து 17,312.90 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.40 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப்பங்குகளில் 24 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக டெக் மஹிந்திரா 4.60 சதவிகிதமும், இன்போசிஸ் 3.93 சதவிகிதமும், விப்ரோ 3.06 சதவிகிதமும், எச்சிஎல் டெக் 2.98 சதவிகிதமும் சரிவுடன் காணப்பட்டன. 

அதிகபட்சமாக மாருதி சுசூகி 1.30 சதவிகிதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 0.61 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →