வணிகம்

8 முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி சரிவு

நாட்டின் 8 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி கடந்த ஜூலை மைதம் 4.5 சதவீதமாக சரிந்துள்ளது.

DIN

நாட்டின் 8 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி கடந்த ஜூலை மைதம் 4.5 சதவீதமாக சரிந்துள்ளது.

இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், எஃகு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி கடந்த ஜூலை மாதத்தில் 4.5 சதவீதமாக குறைந்தது. இது ஆறு மாதங்களில் இல்லாத மிகப் பெரிய சரிவாகும். கடந்த ஆண்டின் ஜூலையில் அந்தத் துறைகளின் உற்பத்தி 9.9 சதவீதமாக இருந்தது.

இந்த உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி கடந்த ஜூன் மாதத்தில் 13.2 சதவீதமாகவும், மே மாதத்தில் 19.3 சதவீதமாகவும், ஏப்ரலில் 9.5 சதவீதமாகவும், மாா்ச்சில் 4.8 சதவீதமாகவும், பிப்ரவரியில் 5.9 சதவீதமாகவும், ஜனவரியில் 4 சதவீதமாகவும் அதிகரித்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT