முகப்பு
வணிகம்

’ஐபோன் 13’ ரூ.30,000 வரை அதிரடி விலை குறைப்பு!

ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட ரூ.30,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 பிப்ரவரி, 2022 at 2:03 PM
ஆப்பிள் ‘ஐபோன் 13’ ஸ்மார்ட்போன்
பகிர்:

ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட ரூ.30,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

தனித்தன்மை வாய்ந்த பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன்கள் உலகம் முழுவதும் அதற்கான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஐபோன் 13-இன் விலையை ஆப்பிள் நிறுவனம் சில சலுகைகளால் அதிரடியாகக் குறைத்துள்ளது.

Advertisement

அதன்படி ரூ.79,900 மதிப்புள்ள ஐபோன் 13 ஸ்மார்ட்போனுக்கு பொதுவான சலுகை ரூ.5,000 , ஐசிஐசிஐ , கோடாக், எஸ்பிஐ வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் பெற்றால் ரூ. 6,000 -ஆகவும் விலைச் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், செயல்பாட்டில் இருக்கும் பழைய ஐபோன்களை எக்ஸ்சேன்ஞ்(exchange) செய்வதன் மூலம் ரூ.18,000 வரை  கிடைப்பதால் ரூ.79,900 மதிப்புள்ள ஐபோன் 13-யை ரூ.29,000 வரை குறைத்து ரூ.50,900 க்கு பெற்றுக் கொள்ளலாம.

புதிதாக ஐபோன் வாங்க நினைப்பவர்கள் இந்த அதிரடி சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் இச்சலுகை ஐபோன் 13-இன் 128ஜிபி , 256ஜிபி, 512 ஜிபி வகை போன்களுக்கும் உண்டு என ஐபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.