ஐஆர்சிடிசி: நிகர லாபம் ரூ.209 கோடியாக உயர்வு
ஐஆர்சிடிசியின் நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 168 சதவீதம் அதிகரித்து ரூ.209 கோடியாக உயர்ந்துள்ளதாக ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.
வணிகம்ஐஆர்சிடிசி: நிகர லாபம் ரூ.209 கோடியாக உயர்வு
ஐஆர்சிடிசியின் நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 168 சதவீதம் அதிகரித்து ரூ.209 கோடியாக உயர்ந்துள்ளதாக ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.
ஐஆர்சிடிசியின் நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 168 சதவீதம் அதிகரித்து ரூ.209 கோடியாக உயர்ந்துள்ளதாக ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின்(2021-22) மூன்றாம் காலாண்டில்(டிசம்பர்-31, 2021) ஐஆர்சிடிசியின் நிகர லாபம், இதே முந்தைய காலகட்டத்தில் இருந்த ரூ.70.9 கோடியிலிருந்து 168 சதவீதம் அதிகரித்து ரூ.209 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 2020-21 ஆண்டின் மூன்று காலாண்டின் நிகர லாபமான 224 கோடியிலிருந்து 140 சதவீதம் அதிகரித்து நடப்பு ஆண்டின் மூன்று காலாண்டுகளின் லாபம் 540 கோடியாக உயர்ந்துள்ளது.
இதனால், ஐஆர்சிடிசி லாபத்தொகையாக(டிவிடெண்ட்) பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.2 வழங்க முன்வந்துள்ளது.
இதையும் படிக்க | ‘ஜியோ புக்’ லேப்டாப் விரைவில் அறிமுகம்: தகவல்