முகப்பு
வணிகம்

என்.எல்.சி. இந்தியா: நிகர லாபம் ரூ.797 கோடி

நிகழ் நிதியாண்டின் (2021-22) முதல் 9 மாதங்களில் என்எல்சி இந்தியா நிறுவனம் ரூ.797 கோடி நிகர லாபம் ஈட்டி சாதனை படைத்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:54 AM
பகிர்:

நிகழ் நிதியாண்டின் (2021-22) முதல் 9 மாதங்களில் என்எல்சி இந்தியா நிறுவனம் ரூ.797 கோடி நிகர லாபம் ஈட்டி சாதனை படைத்தது. மேலும், தனது துணை நிறுவனமான என்எல்சி தமிழ்நாடு உடன் இணைந்து 2,174 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின் வாரியங்களுக்கு வழங்கியுள்ளது.
 மின் உற்பத்தியில் 34% வளர்ச்சி: என்எல்சி இந்தியா நிறுவனம் நிகழ் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 1,848 கோடியே 50 லட்சம் யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளது. அதேபோல, துணை நிறுவனத்தையும் சேர்த்து முதல் 9 மாதங்களில் மொத்தம் 2,174 கோடி யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்து 23.49% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
 தேசிய சராசரியைவிட அதிக உற்பத்தித் திறன்: நாட்டிலுள்ள மின் நிலையங்களின் சராசரி மின் உற்பத்தித் திறன் 57.16 சதவீதமாக இருந்த நிலையில், என்எல்சி மின் நிலையங்கள் 70.20 சதவீதம் என்ற மிக அதிக உற்பத்தித் திறனுடன் இயங்கி, கூடுதல் மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளன.
 ரூ.10 ஆயிரம் கோடியை எட்டும் வர்த்தகம்: என்எல்சி தனது துணை நிறுவனத்துடன் இணைந்து ரூ.9,381 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது.
 என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தனிப்பட்ட வர்த்தகம் ரூ.7,887 கோடியாக இருந்தது.
 இருமடங்கு அதிகரித்த நிகர லாபம்: நிகர லாபம் முந்தைய ஆண்டில் ஈட்டிய தொகையான ரூ.387 கோடியை விட 105.96 சதவீதம் அதிகமாக ரூ.797 கோடி ஈட்டப்பட்டுள்ளது.
 பாதியாகக் குறைந்த நிலுவைத் தொகை: மின் வாரியங்களுக்கு மின் சக்தி வழங்கியது தொடர்பான நிலுவைத் தொகை ரூ.8,554 கோடியில் 51.30 சதவீதம் வரை வசூலிக்கப்பட்டதன் மூலம் ரூ.4,388 கோடி மட்டுமே நிலுவையில் உள்ளதாக என்எல்சி தெரிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →