வணிகம்

நவீன அம்சங்களுடன் சோனியின் புதிய வயர்லெஸ் ஹெட்ஃபோன்!

சோனி நிறுவனம் புதிய அம்சங்களுடன் கூடிய புதிய வயர்லெஸ் ஹெட்ஃபோன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

DIN

சோனி நிறுவனம் புதிய அம்சங்களுடன் கூடிய புதிய வயர்லெஸ் ஹெட்ஃபோன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

'WH-XB910N' என்ற இந்த புதிய சோனி வயர்லெஸ் ஹெட்ஃபோனில் எக்ஸ்ட்ரா பாஸ், டூயல் சென்சார் ஒலி தொழில்நுட்பம், அடாப்டிவ் சவுண்ட் கன்ட்ரோல், நீண்ட பேட்டரி ஆயுள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

ரூ.14,990க்கு 'WH-XB910N' ஹெட்ஃபோன்கள் கருப்பு மற்றும் நீல நிறங்களில் சோனி ஸ்டோர்கள் மற்றும் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் கிடைக்கும். 

காது முழுவதும் மூடக்கூடிய இந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன், துல்லியமான ஒலியை கேட்கச் செய்கின்றன. ஹேண்ட்ஸ்-ஃப்ரீ அழைப்புகளுக்கு உங்கள் குரல் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்க, ஆடியோ சிக்னல் செயலாக்கத்துடன் இரண்டு உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன்களை ஒருங்கிணைக்கும் 'பிரிசிஸ் வாய்ஸ் பிக்கப் டெக்னாலஜி'(Precise Voice Pickup Technology) தொழில்நுட்பம் இதில் உள்ளது. 

மேலும் பாடல்களின் உயர்தர ஒலிக்கு 'டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் இன்ஜின்'(Digital Sound Enhancement Engine) உள்ளது. சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றவாறு ஒலி அமைப்புகளை மாற்றுகிறது. சத்தம் நிறைந்த இடத்தில் இருந்தாலும் அமைதியான சூழ்நிலையை உணர முடியும். 

ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில் இரண்டு புளூடூத் சாதனங்களுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

WH-XB910N ஹெட்ஃபோன்கள் கூகுள் அசிஸ்டன்ட்(Google Assistant) மற்றும் அலெக்ஸா(Alexa)வுடன் இணக்கமானவை.

ப்ளூடூத் வழியாக 'விண்டோஸ் 10' கணினியுடன் ஹெட்ஃபோன்களை இணைக்க 'ஸ்விப்ட் பேர்'(Swift Pair) கருவி இதில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT