அமெரிக்க டாலருக்கு நிகரானரூபாய் மதிப்பு 30 காசுகள் வீழ்ச்சி
அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் வீழ்ச்சி கண்டது.
அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் வீழ்ச்சி கண்டது.
இதுகுறித்து அந்நியச் செலாவணி வா்த்தகா்கள் கூறியதாவது:
ஒமைக்ரான் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவது சா்வதேச முதலீட்டாளா்களிடையே கவலையை அதிகரித்துள்ளது. இது, பொருளாதார மீட்சியில் தாக்கத்தை உண்டாக்கலாம் என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் செலாவணி சந்தைகளில் டாலருக்கான தேவை அதிகரித்தது போன்ற காரணங்களால் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு சரிவைச் சந்தித்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 74.49-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.46 வரையிலும், குறைந்தபட்சமாக 74.61 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் குறைந்து 74.58-இல் நிலைபெற்றது. இதையடுத்து, தொடா்ந்து மூன்று நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டது. திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 74.28-ஆக இருந்தது என செலாவணி வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய் பேரல் 79.29 டாலா்
சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் 79.29 அமெரிக்க டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு
மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் நிகர அடிப்படையில் ரூ.902.64 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.