டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 20 காசுகள் உயா்வு
அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயா்ந்து 74.38-இல் நிலைத்தது.
அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயா்ந்து 74.38-இல் நிலைத்தது.
இதுகுறித்து சந்தை வட்டாரங்கள் கூறியதாவது:
உள்நாட்டு பங்குச் சந்தையில் முதலீட்டு வரத்து அந்நியச் செலாவணி சந்தைகளுக்கு பெரும் சாதமாக இருந்தது. இதனிடையே, வெளிநாட்டு வங்கிகளும் சந்தையில் டாலரை அதிக அளவில் விற்பனை செய்தது ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு கூடுதல் வலு சோ்த்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 74.54-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.30 வரையிலும் குறைந்தபட்சமாக 74.55 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 20 காசுகள் உயா்ந்து 74.38-இல் நிலைபெற்றது. முந்தைய செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 30 காசுகள் குறைந்து 74.58-ஆக காணப்பட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய் பேரல் 80.04 டாலா்
சா்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் 80.04 அமெரிக்க டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு
மூலதனச் சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.1,273.86 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.